Showing posts with label மன்னையின் நறுக்.... Show all posts
Showing posts with label மன்னையின் நறுக்.... Show all posts

ஆராதனா


ஆராதனா
சமத்துவக் கல்வி பயில்கிறாள்
“செட்டிநாடு” வித்யாஸ்ரமத்தில்..!
*
----
 குருத்தொட்டுச் செடிக்கு
காய்க்கும் திறன் அதிகம் என்ற கோவிந்தன் தான்
சாதி மறுப்பு திருமணம் செய்த தன் மகளை
கெளரவத்துக்காய் கொன்று தீர்த்தான் !
*.
கரிசனம் !
ஓட்டுப்பெட்டியில் பொத்தானை அழுத்தும் வரை
அணையாமல் இருந்தது மின்சாரம் ..!
*
 பதில் தெரிந்த கேள்விகளை
ஒருபோதும் குழந்தைகள் கேட்பதில்லை !
*
~~ மன்னை முத்துக்குமார்.

மெய்ப்பிக்கத் தேவையில்லை !

போலிகள் தான்
போராட வேண்டும் ;
உண்மைக்கு ஒருபோதும்
தன்னை மெய்ப்பிக்கத் தேவையில்லை !
*

அடுத்து வரலாம்....


தலித்
எழுத்தாளராம்.
அடுத்து
வரலாம்..

கவுண்டர்  -செட்டியார்- கோனார்
தேவர் -வன்னியர் -வெள்ளாளர்
எழுத்தாளர்கள்..!
*

இந்திய நதிகள்..

இந்திய நதிகள்
இணைக்கப்படுகின்றன,
ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் !
*
இந்த வாரம் ( 19-01-2015) குங்குமம்இதழில் பதிவாகியுள்ளது .

சாதிக்க...

இந்தியாவில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வயது வரம்பு 25

ஆனால் ..

பாரதியார் " பாரதி " என்ற பட்டத்தை பெற்றபோது அவரது வயது 11.

வில்லியம் பிட் இங்கிலாந்து பிரதமரான போது அவருக்கு வயது 24.

* வால்ட் டிஸ்னியின் கார்ட்டூன் சினிமா 1923-ம் ஆண்டு வெளிவந்தபோது அவரின் வயது 22.

* மாற்றுத் திறனாளியான ஹெலன் கெல்லர் `த ஸ்டோரி ஆப் மை லைப்' வெளியிட்டபோது அவரின் வயது 22.

* மார்க் ஸ்பிட்ஸ் ஒலிம்பிக்கில் 7 தங்க மெடல்களை வாங்கியபோது அவரது வயது 22.

* தத்துவத்தின் தந்தை சார்லஸ் டார்வின் பரிணாமக் கொள்கையை கண்டறிந்தபோது வயது 22.

* மார்டின் லூதர்கிங் மதச் சீர்திருத்தத்தை விதைத்தபோது அவரின் வயது 21.
-
அதனால சாதிக்க வயசு முக்கியமில்ல..

எந்த சாதிக்காரனுடையது ?




உயிருக்கு 
போராடுபவனுக்கு 
ரத்த வங்கியில் இருக்கும் ரத்தம்
எந்த சாதிக்காரனுடையது 
 என்ற 
கவலையெல்லாம் இருப்பதில்லை !

*