Showing posts with label ஹைக்கூ. Show all posts
Showing posts with label ஹைக்கூ. Show all posts

ஆராதனா


ஆராதனா
சமத்துவக் கல்வி பயில்கிறாள்
“செட்டிநாடு” வித்யாஸ்ரமத்தில்..!
*
----
 குருத்தொட்டுச் செடிக்கு
காய்க்கும் திறன் அதிகம் என்ற கோவிந்தன் தான்
சாதி மறுப்பு திருமணம் செய்த தன் மகளை
கெளரவத்துக்காய் கொன்று தீர்த்தான் !
*.
கரிசனம் !
ஓட்டுப்பெட்டியில் பொத்தானை அழுத்தும் வரை
அணையாமல் இருந்தது மின்சாரம் ..!
*
 பதில் தெரிந்த கேள்விகளை
ஒருபோதும் குழந்தைகள் கேட்பதில்லை !
*
~~ மன்னை முத்துக்குமார்.

மெய்ப்பிக்கத் தேவையில்லை !

போலிகள் தான்
போராட வேண்டும் ;
உண்மைக்கு ஒருபோதும்
தன்னை மெய்ப்பிக்கத் தேவையில்லை !
*

அடுத்து வரலாம்....


தலித்
எழுத்தாளராம்.
அடுத்து
வரலாம்..

கவுண்டர்  -செட்டியார்- கோனார்
தேவர் -வன்னியர் -வெள்ளாளர்
எழுத்தாளர்கள்..!
*

இந்திய நதிகள்..

இந்திய நதிகள்
இணைக்கப்படுகின்றன,
ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் !
*
இந்த வாரம் ( 19-01-2015) குங்குமம்இதழில் பதிவாகியுள்ளது .

ஹைக்கூ


முதல் தளத்தில் இழவு
மூன்றாவது தளத்தில் முகூர்த்தம்
அடுக்குமாடி குடியிறுப்பு !
*
இந்திய நதிகள்
இணைக்கப்படுகிறது
ஒவ்வொறு தேர்தலின் போதும் !
*
சாதி சங்க மாநாடு
உணர்ச்சிப் பிழம்பாய் பேசினான்
அந்த சே குவேரா டி சர்ட் போட்ட இளைஞன் !
*
புல்லாங்குழல் விற்பவன் ஊதினான்
தன் பசியையும் சேர்த்து !
*
தீ வைத்தும் 
சிரிக்கிறது
மெழுகுவர்த்தி !
*